"குந்தவை கதைகள்" வெளியீட்டு நிகழ்வு
"குந்தவை கதைகள்" வெளியீட்டு நிகழ்வு 10.06.2025 செவ்வாய்க்கிழமை மாலை3.30 மணிக்கு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் (ராஜா கிறீம் ஹவுஸ்) நடைபெற்றது. நிகழ்வுக்கு உடுவில் அரவிந்தன் தலைமை வகித்தார். வெளியீட்டுரையை தமிழியல் சார்பாக அ.யேசுராசா நிகழ்த்தினார். நூல் தொடர்பான உரைகளை ஸ்ரீலேகா பேரின்பகுமார், சி. ரமேஸ், இ. இராஜேஸ்கண்ணன் ஆகியோர் நிகழ்த்தினர். முதற்பிரதியை ச. இராமரூபன் அவர்கள் பெற்றுக் கொண்டார். நிகழ்வில் மீளுகை அமைப்பின் சார்பாகவும் தொண்டைமானாறு கிராம உறவினர்கள் சார்பாகவும் மூத்த எழுத்தாளர் குந்தவை அம்மா அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி மாலையிட்டு எழுத்தாளர்களும் உறவுகளும் கௌரவித்தனர். ஏற்புரையை குந்தவை அவர்கள் நிகழ்த்தினார். தமிழியலும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து வெளியிட்ட "குந்தவை கதைகள்" சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சார்பில் சு. குணேஸ்வரன் நன்றியுரை நிகழ்த்தினார்.